தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது வருகின்ற 11-ந் ேததி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆலோசனை கூட்டம்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், அவர் தெரிவித்ததாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் நடைபெறவுள்ளது.இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்..எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று தனியார்துறை மூலமாக வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com