search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதி அருகே அடிப்படை வசதி கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
    X

    பொன்னமராவதி அருகே அடிப்படை வசதி கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

    • பொன்னமராவதி அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்
    • தார் சாலை தற்போது குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலைமை உள்ளது

    பொன்னமராவதி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் படி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீகம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கிய சில வினாடிகளில் அங்கிருந்த பொதுமக்களில் சிலர், 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலமை உள்ளது. சீரான போக்குவரத்து இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும் ஏற்கனவே வந்து சென்ற 7 பேருந்துகளில் தற்போது ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்கிறது. ஆர்.பாலகுறிச்சியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை, வைரம்பட்டியில் இருந்து ஆர்.பாலகுறிச்சிக்கு செல்லும் சாலை ஆர்.பாலக்குறிச்சி விளக்கு சாலை உள்ளிட்ட ஏழு கிலோ மீட்டருக்கு இன்று வரை ஏன் புதிய தார் சாலை போடவில்லை.

    ஏற்கனவே நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் கொடுத்த தீர்மானத்தை ஏன் இன்று வரை நிறைவேற்றவில்லை என மீண்டும் மீண்டும் பொதுமக்கள் அதிகாரிகளை பார்த்து கேள்ளிவிகள் கேட்டனர். சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் பின்னர் கிராம சபை கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கூச்சலிட்டு கலைந்து சென்றனர்.


    Next Story
    ×