search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்னியப்பிள்ளை வயல் கிராமத்தை மையமாக வைத்து பகுதிநேர அங்காடி-  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
    X

    வன்னியப்பிள்ளை வயல் கிராமத்தை மையமாக வைத்து பகுதிநேர அங்காடி- கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

    • வன்னியப்பிள்ளை வயல் கிராமத்தை மையமாக வைத்து பகுதிநேர அங்காடி- கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது

    அறந்தாங்கி:

    குடியரசு தின விழாவையொட்டி அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் மேலப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய அங்காடிக்கட்டிடம் மற்றும் வன்னியப்பிள்ளைவயல் கிராமத்தை மையமாக வைத்து பகுதிநேர அங்காடி அமைப்பது, நெகிழிப்பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட 15க்்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட மக்கள் நல அலுவலர் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் கவிதா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் நீதிராஜ், சுகாதாரத்துறை ஆய்வாளர் அருள் பிரகாசம், வனத்துறை ஆய்வாளர் கருணாநிதி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கருப்பையா உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×