ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வு கூட்டம்

பொன்னமராவதியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வு கூட்டம்
Published on

பொன்னமராவதி,

பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை, பொன்னமராவதி வர்த்தகர் கழகம் மற்றும் முத்தமிழ்ப்பாசறை இணைந்து ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வர்த்தகர் கழக இணைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கிராமிய பாடகர் வைகை பிரபா தமிழ் வாழ்த்துப்பாடலை பாடினார்.கூட்டத்தில் தமிழ்வளர்ச்சிதுறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சபீர்பானு பங்கேற்று வணிக நிறுவனங்களின் பெயர்பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தி, ஆட்சி மொழிச்சட்ட விளக்க உரையாற்றினார். முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர்கள் சந்திரன், மாணிக்கவேலு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வணிகர்களுக்கு வணிகர் பயன்பாட்டு சொல்லகராதி வழங்கப்பட்டது. பொன்னமராவதி அரிமா சங்கத்தலைவர்கள் நாகராஜன், சுந்தர்ராஜன், முருகானந்தம், ரவிச்சந்திரன், ரோட்டரி சங்கத்தலைவர் மலைச்சாமி, அரிமா சங்க மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சித்துறை உதவியாளர் சுப்புராம் மற்றும் வர்த்தகர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com