என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூன்று வயது  மகளுடன் தாய் மாயம்
    X

    மூன்று வயது மகளுடன் தாய் மாயம்

    • 8ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    ஆலங்குடி,

    ஆலங்குடி கம்பர் தெருவைச்சேர்ந்த சண்முகராமு மனைவி புவனேஸ்வரி (வயது 33). இவர் தனது மகள் மூன்று வயது உள்ள ஸ்ரீஆசினி பெண் குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார்.இந்நிலையில் அக்கம் பக்கம் மற்றும் உற்றார் உறவினர்களிடமும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்து தாயும் மகளையும் காணவில்லை. இதனைத்தொடர்ந்து புவனேஸ்வரி தந்தை சுப்பிரமணியன் மகன் சண்முக பிரபு ( வயது 45) என்பவர் ஆலங்குடி போலீசில் புகார் மனு கொடுத்தார்.புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தாயும் குழந்தையையும் தேடி வருகின்றனர். தாய் தனது மூன்று வயது பெண் குழ ந்தையுடன் வீட்டிலிருந்து காணாமல் போனது ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×