மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ பறிமுதல்

கறம்பக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுஇருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாணை நடத்தி வருகினறனர்
மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ பறிமுதல்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்னி ஆற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரணையில் மணல் அள்ளி கொண்டு வந்த லோடு ஆட்டோவிற்கு அனுமதி இல்லை என்று தெரியவந்தது. லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சூரியகுமார் மோகன் ரமேஷ் குமார் மன்மத ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com