மணவிடுதியில் இளம்பெண் கடத்தல்?

வேலைக்கு சென்றவர் மாயம் வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்
மணவிடுதியில் இளம்பெண் கடத்தல்?
Published on

ஆலங்குடி

ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டை உள்ள தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல கடைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன பெண் குறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பலனில்லை.இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை முத்துசாமி (வயது 52 ) கொடுத்த புகா ரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை யாரும் கடத்தி விட்டார்களா? அல்லது காதலனுடன் சென்று விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com