search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் தர்ணா
    X

    விவசாயிகள் தர்ணா

    • உழவர் சந்தை முன்பு போராட்டம்
    • தனிநபருக்கு கடைகள் வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்த வரும் விவசாயிகள், நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து இன்று விற்பனையை கைவிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை சந்தைபேட்டை, திலகர் திடலில் தமிழக அரசின் உழவர் சந்தை உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், கடந்த 2000 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் 104 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளின் மூலமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த விளை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இதனைவேளாண் விற்பனை துணை இயக்குனரகம் நிர்வகித்து வருகிறது.இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் ஆனால் விதிமுறையை மீறி, புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள கடைகள், தனிநபர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் உழவர் சந்தைக்கு வெளியில் இருபுறமும் வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கு நகராட்சி அனுமதி அளித்துள்ளது. உழவர் சந்தைக்கு வெளியில் வியாபாரம் செய்பவர்களிடம் தரை வாடகையை ஒப்பந்ததாரர் வசூலித்து வருகிறார்.இதனால் உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படுவதாக நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் வேளாண் துறையும், நகராட்சி நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும சிலர் உழவர் சந்தைக்கு வெளியில் தற்காலிக கடைகளை அமைக்க தொடங்கி உள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று திடீர் என விற்பனையை கைவிட்டு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்கள் வேளாண்துறையையும், நகராட்சியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் தர்ணா போராட்டத்தினால் உழவர் சந்தையில் விற்பனை முடங்கியது. இதனால் காய், கனி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்ற த்துடன் திரும்பினர்.

    தர்ணா போராட்டம் குறித்து ராஜாங்கம் என்ற விவசாயி கூறும்போது.... உழவர் சந்தையின் உள்ளே ஒரு பால்கடை இருக்கும் பட்சத்தில், தற்போது வெளியிலும் ஒரு பால்கடை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பால், டீ குடிக்க வருபவர்கள் அதிகளவு இந்த பகுதியில் திரளுகின்றனர். மேலும் வெளியில் அதிகளவு கடைகள் போட்டு கொள்ள நகராட்சி அனுமதித்து வருவதால், பொதுமக்கள் உழவர் சந்தைக்கு உள்ளே வந்து செல்வதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.விவசாயி பரமசிவம் கூறும்போது.... தனி நபர்களுக்கு கடைகளை வாடகைக்கு விடக்கூடாது. வெளியில் அதிகளவு கடைகளை அனுமதிக்க கூடாது, விவசாயிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகார் அளிக்கப்படும் போது, சரி செய்து விடுகிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் இன்று விற்பனையை கைவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு ஒரு முடிவு தெரியாமல் நாங்கள் விடுவதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.விவசாயிகளின் போராட்டத்தை ெதாடர்ந்து உழவர் சந்தைக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் நகராட்சி அதிகாரிகளும், போலீசா ரும் பேச்சு வார்த்தை நடத்தினர். விவசாயிகளின் இந்த திடீர் தர்ணா போரா ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை நிலவியது.

    Next Story
    ×