மாட்டு வண்டிகள் பறிமுதல்

கறம்பக்குடி அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
மாட்டு வண்டிகள் பறிமுதல்
Published on

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அக்னி ஆற்றுப்பகுதியில் மணல் அனுமதியின்றி கடத்தப்படுவதாக போலீஸருக்கு தகவல் வந்த நிலையில் கறம்பக்குடி காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது பட்டத்திக்காடு விளக்கு சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டிகளை வழி மறித்து சோதனையிட்டனர். அதில் உரிய அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மாரியப்பன் கணேசன் சின்னத்தம்பி நடேசன் வீரய்யா ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com