இருதரப்பினர் மோதல்-8 பேர் மீது வழக்கு பதிவு

இருதரப்பினர் மோதலில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஇதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருதரப்பினர் மோதல்-8 பேர் மீது வழக்கு பதிவு
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பட்டவையனார் கோவில் அமைந்துள்ளது.இந்த நிலையில் இக்கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைப்பதென் ஒரு தரப்பினர் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மற்றொரு தரப்பினர் அதனை தடுத்து நிறுத்தினர்.இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பில் இருந்தும் இருவர் காயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com