வாகன விபத்தில் 4 பேர் காயம்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வாகன விபத்தில் 4 பேர் காயம்
Published on

ஆலங்குடி.

புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த காட்டுப்பட்டி கணேசன் மகன் விகாஷ் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்த ஜெய ராமன் மகன் கிருபாநிதி (வயது 20) ஆகிய இருவரும் ஆலங்குடி வழியாக அறந்தாங்கியை நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதே போல் ஆலங்குடி அருகில் உள்ள தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (19). அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (26) இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அண்ணாநகர் பாலம் அருகில் வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது . இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com