என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ள பொது மக்கள்.
திருவோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
- வண்ணான்கொள்ளை கிராமத்தில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடத்துடன் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே இடையாத்தி வடக்கு வண்ணான்கொள்ளை கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காலி குடத்துடன் நெய்வேலி கடைவீதியில் கரம்பக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும்
வட்டாத்திகோட்டை போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.






