search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஆபத்தான நிலையில் வளைந்து கிடக்கும் மின்கம்பம்.

    மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.
    • மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் திருச்செனம்பூண்டி கிராமத்தில் பிரதான சாலையில் குறுக்கே சென்ற மின்சாரக் கம்பியை அவ்வழியாக சென்ற வைக்கோல் ஏற்றி சென்ற லாரி இடித்ததில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த இரும்பு மின்சார கம்பம் வளைந்து கீழே சாய்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக லாரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அறுந்து தொங்கிய மின்சார கம்பிகள் அப்படியே விடப்பட்டுள்ளனமின்சாரம் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அருகில் டிரான்ஸ்பாரம் கம்பம் உள்ளது.

    இதிலிருந்து சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.

    இந்த வழித்தடத்தில் மணல் குவாரி இருப்பதால் மணல் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருக்கின்றன.

    இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலை ஓரத்தில் செல்லும்போது அறிந்து கிடக்கும் மின் கம்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுமாற்றம் ஏற்படுகிறது.

    மின்சாரம் துண்டிக்க ப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் அது குறித்து எந்தவித அறிவிப்பும் அந்த இடத்தில் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

    மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளதும் பாதுகாப்பாற்ற தன்மையாக சொல்லப்படுகிறது.உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட்டு கீழே கிடக்கும் மின் கம்பியை அகற்றவும், விழுந்து கிடக்கும் மின் கம்பத்தை அகற்றி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×