திருக்கடையூரில், பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கல்

பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் எந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
திருக்கடையூரில் பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
திருக்கடையூரில் பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் சிங்கப்பூர் ஜீவ காருண்யா நண்பர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி தலைமை தாங்கினார். செம்பனார் கோவிலில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் துளசிரகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், சிங்கப்பூர் ஜீவ காருண்யா மேலாளர் குடந்தை கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்,

இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com