சங்கராபுரத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர்.
சங்கராபுரத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கராபுரத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறிய ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல்கள் சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் ராமசாமி வரவேற்றார். இதில் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமையை தடுக்க தவறிய ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர். இதில் மூத்த வக்கீல்கள் பரம குரு, அன்பழகன், சரவணன், திருநாவுக்கரசு, வக்கீல்கள் பாலா, அண்ணாமலை, பிரபாகரன், சுரேஷ் பாபு, இள மாறன், பாரி, சத்தியமூர்த்தி, குமார், முகமது பாஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com