சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் வாய்க்காலை தூர் வாரக்கோரி முற்றுகை போராட்டம்

பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் நகர் பகுதியில் உள்ள வார்டு களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.

இந்த மெத்தனப் போக்கை கண்டித்தும், பி.டி.ஆர். கால்வாயை தூர் வார வேண்டும் எனவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனத்தை மூட வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதில் சின்னமனூர் நகர பொதுச் செயலாளர் நேதாஜி குமார் என்ற வசீகரன், நிர்வாகிகள் தர்மராஜ், பிரபாகரன், வேலு மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். போராட்டம் குறித்து அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com