குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் தகவல்

கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்கள் பெறப்பட்டது.6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை வழங்கல்.
ஒன்வொன்றும் உதவிடும் உங்களுக்கு எனும் நூலை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
ஒன்வொன்றும் உதவிடும் உங்களுக்கு எனும் நூலை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், திருக்காட்டுப்பள்ளி கிராமம் கூடநாணல் பகுதியில் வசிக்கும் 6 பயனாளிகளுக்கு விலை இல்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக தஞ்சை இராமதாசு எழுதிய அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள ஒன்வொன்றும் உதவிடும் உங்களுக்கு என்னும் நூலினை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com