ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பஸ் டிரைவரை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காயம் அடைந்த கார்த்திக்
காயம் அடைந்த கார்த்திக்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் கார்த்திக் (வயது29). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் பஸ் கண்டெக்டர் மணி என்பவ-ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மது குடிக்க செல்லலாம் என   கார்த்திக்கை மூகாம்பிகை கோவில் அருகே செல்ல மணி அழைத்துள்ளார். இதனை நம்பி கார்த்திக்கும் அங்கு சென்றுள்ளார்.

அப்போது மணி மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கை சுற்றி வளைத்து கத்தியால் குத்தினர். இதில் தலை, தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

 பலத்த காயம் அடைந்த கார்த்திக் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com