கோவில்பட்டிபுற்றுக்கோவிலில் பிரதோஷ விழா

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. 18 வகையான அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
 புற்றுக்கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி தீபாராதனை காண்பிக்கப்பட்ட காட்சி.
புற்றுக்கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி தீபாராதனை காண்பிக்கப்பட்ட காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com