சிந்தலவாடம்பட்டி, கள்ளிமந்தையம் பகுதிகளில் நாளை மின்தடை

சிந்தலவாடம்பட்டி, கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சனநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரி வித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி நடைபெறுவதால் கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தோவத்தூர், கே.டி.பாளையம், ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செய்ற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com