தபால் வாக்குச்சீட்டுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தேனி உள்ளாட்சி தேர்தலில் தபால் வாக்குச்சீட்டுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தேனியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி கலெக்டர் முரளிதரன்
தேனியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி கலெக்டர் முரளிதரன்
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

பறக்கும்படை குழுக்கள் பணிபுரிவதை கண்காணித் தல், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்தல் அவற்றை தொடர்ந்து கண்காணித்து, பறிமுதல் செய்யப்படும் தொகை, பொருட்கள் குறித்து தினசரி அறிக்கை அனுப்பிட வேண்டும்.

பெறப்பட்ட வேட்புமனுக்கள், அவற்றை பரிசீலனை செய்தல், சின்னங்கள் ஒதுக்கீடு, போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் முடிவு செய்து படிவம்&9&இல் அறிக்கை அனுப்பிட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் தேர்தல் முகவர்களுக்கு உரிய படிவத்தில் ஆணை வழங்கிட வேண்டும்.

போட்டியிடும் வேட் பாளர்கள் மற்றும் முதன்மை முகவர்களிடமிருந்து மாதிரி கையொப்பம் பெறப்பட வேண்டும். அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அச்சடித்து 100 சதவீதம் சரிபார்த்தல், உரிய பாதுகாப்போடு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் பாது காப்பாக வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சீரற்றமயமாக்கல் 3ம் கட்ட பணி வேட்பாளர்கள் சின்னம், பெயர் பொருந்தும் பணிகள் பாதுகாப்புடனும் மேற்கொள்ள வேண்டும். தேர்தல்களுக்கு தேவையான அனைத்து படிவங்கள், உறைகள், எழுதுபொருட்கள் பெற்று வழங்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

போஸ்டர்கள், குறியீடு செய்த வாக்காளர் பட்டியல்கள், வாக் காளர்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்ய வேண்டும். வாக்காளர்களின் துண்டு சீட்டு விநியோகம், டெண்டர் வாக்குச்சீட்டு, தாள் முத்திரை உள்ளிட்டவைகள் வாக்குச் சாவடி வாரியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர்கள், தன்னார் வலர்கள் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு பொருள்கள் தயாரித்தல், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்கள் மண்டல அலுவலர்கள் மூலம் அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com