பொன்னேரி அருகே சொத்து தகராறில் சமாதானம் செய்தவர் அடித்துக்கொலை

பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி அருகே சொத்து தகராறில் சமாதானம் செய்தவர் அடித்துக்கொலை
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48).

இவர் சென்னை எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பொன்னேரிக்கு தமது மனைவியுடன் குடி பெயர்ந்தார். நேற்று மாலையில் பாலமுருகனை அவரது அக்காள் மகன் ராபர்ட் தனக்கு பிரச்சினை என்பதால் உதவிக்கு போன் செய்து அழைத்தார். தனது அக்கா மகன் பாலமுருகன் உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்டு பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த ராபர்ட்டை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த வினோத், அவரது நண்பர் கிரண்ராஜ் திலீப், ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கை மற்றும் கல்லால் பாலமுருகனை தாக்கினர். தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலமுருகன் துடித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து பாலமுருகனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலாடு பகுதியில் சொத்து தகராறு காரணமாக இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியான நிலையில் அதே பிரச்சினை தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி. கிரியா சக்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். தப்பி ஓடிவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com