பொங்கல் பண்டிகை; கும்பகோணம் கோட்டம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை; கும்பகோணம் கோட்டம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

தஞ்சாவூர்:

கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்கு னர் ராஜ்மோகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம், இடையூறின்றி, பயணம்செ ய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர்,

திருத்துறை ப்பூண்டி, வேதா ரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை ,

காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன .

இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com