நகலை எரித்து தமிழ் அமைப்புகள் போராட்டம்

ஜிப்மர் சுற்றறிக்கை நகலை எரித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் செய்தனர்.
தமிழ் அமைப்புகள்-போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட காட்சி.
தமிழ் அமைப்புகள்-போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை ஜிப்மரில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தமிழர் தேசிய பேரியக்கம் சார்பில் ஜிப்மர் 7-ம் நம்பர் நுழைவுவாயில் முன்பு நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகில் இருந்த இயக்கத்தின் தலைவர் வேல்சாமி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். 

ஊர்வலத்தில் நாம் தமிழர் சிவக்குமார், தமிழர் களம் அழகர், தமிழ்மாறன்,  உலகத்தமிழ் கழகம் தமிழ்ழகன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சுப்பையா திருமண மண்டபம் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் இந்தி சுற்றறிக்கை நகலை எரிக்க முயற்சித்தனர். அதை போலீசார் பறித்தனர். மற்றொரு பிரிவினர் நுழைவு வாயில் அருகே ஓடிச்சென்று நகலை எரித்தனர். போலீசார் 3 பெண்கள் உட்பட 30 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com