2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கணவர்-மாமியாரிடம் கோபித்து விட்டு 2 குழந்தைகளுடன் பெண் மாயமானர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவை குறிஞ்சிநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது36). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லட்சுமி(28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில்  வினோத்குமாரின் மகனும், மகளும் விளையாடி கொண்டிருந்தனர். இதனை லட்சுமியிடம் வினோத்குமாரின் தாய் சுமதி கண்டித்துள்ளார். 

இதில் மனவருத்தமடைந்த லட்சுமி குழந்தைகளை பள்ளியில் விடுவதாக அழைத்து சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் லட்சுமி மற்றும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை.

இதனையறிந்த வினோத் குமார் லாஸ்பேட்டையில் உள்ள லட்சுமியின் தாய் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து வினோத்குமார் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com