search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்திய போலீசார்
    X

    பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

    • ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் ஓமலூரில் உள்ள பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • கிராமங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் ஓமலூரில் உள்ள பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா கலந்துகொண்டு மாணவிகளிடம் பேசினார்.

    மேலும், விளக்க படங்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் இந்திரா பேசும்போது ஓமலூர் காவல் நிலையத்தில் 181 மகளிர் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மகளிர் உதவி மையம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் உடனடி உதவி, அவசர உதவி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது. இந்த உதவி மையத்தில் பெண்கள் சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும், மனம் திறந்து பேசலாம்.

    மேலும், கிராமங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள்.

    அதேபோல வேலை செய்யும் இடத்தில், பாலியல் தொல்லைகள், குடும்பத்தில் கணவர் அல்லது வேறு நபர்களால் தொடர் தொல்லைகள், சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவித்து பயனடையலாம். இந்த எண்ணில் அழைத்தல் சம்மந்தப்பட்ட இடத்திற்கே போலீசார் வந்து, தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×