சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

பல இடங்களில் மாஞ்சா நூல்கள் மூலம் ஆபத்தான வகையில் பட்டம் விடப்படுகிறது. சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
Published on

சென்னை:

சென்னை மாநகர போலீஸ் எல்லையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல்களை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணிக்க ஒவ்வொரு காவல் மாவட்டங்கள் வாரியாக ஏற்கனவே தனிப்படையினர் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையும் மீறி பல இடங்களில் மாஞ்சா நூல்கள் மூலம் ஆபத்தான வகையில் பட்டம் விடப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் வருகிற செப்டம்பர் 6-ந் தேதி வரை சென்னை மாநகர போலீஸ் எல்லையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்ய தடைவிதித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் இந்த உத்தரவை மீறி யாரேனும் சட்ட விரோதமாக மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தாலோ அல்லது மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com