பொள்ளாச்சியில் பிளேடால் கழுத்தை அறுத்த பிளஸ்-1 மாணவர்

15 வயது மாணவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சியில் பிளேடால் கழுத்தை அறுத்த பிளஸ்-1 மாணவர்
Published on

பொள்ளாச்சி,

ஆனைமலை உப்பிலியர் வீதியை சேர்ந்தவர் 15 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அக்கம் பக்கத்தினர் மூலமாக அவரது தந்தைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மகனை கண்டித்தார்.

இதனால் கடந்த சில நாட்களாக மாணவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com