விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு

வீட்டின் வெளியே விளையாடிய போது சங்கரி யை தாய் திட்டியதாக தெரிகிறது.சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கால்வேஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் சங்கரி (வயது16).

இந்த சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாய் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சங்கரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனேஅவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com