search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1 தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 பேர் தேர்ச்சி
    X

    விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலர் கிருஷ்ண பிரியா.

    பிளஸ்-1 தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 பேர் தேர்ச்சி

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேரும் தேர்வு எழுதினர். இந்நிலையில்தான் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 27-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 189 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன இதில் அரசு பள்ளிகள் 130 தனியார் பள்ளிகள் 69 உள்ளனமொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 308 பேர் ஆகும் இதில் 19 ஆயிரத்து 517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டை விட 8 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் 12 ஆயிரத்து 950 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 84.67 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    Next Story
    ×