search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு ஓட்டல் உணவகங்களில் புதிய வகை உணவுகள் அறிமுகப்படுத்த திட்டம்-அமைச்சர் மதிவேந்தன் தகவல்
    X

    தமிழ்நாடு ஓட்டல் உணவகங்களில் புதிய வகை உணவுகள் அறிமுகப்படுத்த திட்டம்-அமைச்சர் மதிவேந்தன் தகவல்

    • கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • முதல் முறையாக தமிழக அரசு முன்வந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த உள்ளது.

    கோவை

    கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்க ப்பட்ட உணவகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் புதுபிக்கப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக சென்னை தீவுத்திடல் தமிழ்நாடு ஓட்டல் உணவகம், கோவை, கன்னியாகுமரி, நெல்லை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் புதுபிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாடு ஓட்டல் உணவகங்களில் புதிய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த காலகட்டத்தில் தனியார் விடுதிகளுடன் போட்டியிடும் வகையில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்கள் புதுபிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும்.

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் முதல் முறையாக சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டம் அறிமுகபடுத்தியுள்ளோம்,

    இதன் முலம் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக கொள்ளிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பூண்டி உள்ளிட்ட ஏரிகள், பூம்புகார் ஆகியவற்றையும் புதுபிக்க உள்ளோம்.

    மேலும் இதுவரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழக அரசு முன்வந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த உள்ளது. அதில் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று ஆய்வு செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×