பட்டா கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் மனு

பெரிய காட்டூர் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க மனு அளித்துள்ளோம்.
பட்டா கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் மனு
Published on

பல்லடம் : 

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள், அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தார் பானுமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பெரிய காட்டூர் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பட்டா கேட்டு இதுவரை பலமுறை மனு கொடுத்தும், இன்னும் பட்டா கிடைக்கவில்லை. எனவே விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com