

பாலக்கோடு,-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் 700-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்ற னர்.
ஆடு,மாடு மேய்த்தல், செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லுதல் இவர்களின் பிரதான தொழிலாக உள்ளது.
இக்கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த அரசு 50 வருடங்களாக பேருந்து வசதி ஏற்படுத்த கொடுக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 12-ம் வகுப்பு அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள மாரண்டஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.
மேலும் மாணவ மாணவிகள் நடந்தும் , சைக்கிள் மற்றும் பெற்றோ ர்கள் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் நிலையில் உள்ளதாகவும் அடர்ந்த வனப்பகுதியை கடந்த செல்லுவதால் வனவி லங்குகள் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகவும், உயர்கல்விக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இக்கிரா மத்திற்க்கு ரேஷன்கடை, சுகாதார நிலையம், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை அரசால் செய்து தரப்படவில்லை, மேலும் இங்கு வசிப்பவர்களுக்கு நிலம் மற்றும் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படமால் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.