ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி

மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.
ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி
Published on

காஞ்சிபுரம்:

விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com