கால்நடை சிகிச்சை முகாம்

பெரம்பலூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது
கால்நடை சிகிச்சை முகாம்
Published on

பெரம்பலூர்,

70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை மற்றும் கால்நடை பராம்பரிப்புத்துறை இணைந்து டிஆர்டீ.182 அயிலூர் பால் உற்பததியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை சிகிச்சை முகாமில் சிறந்த கன்றுக்குட்டிகளுக்கு பரிசுகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் குணசேகரன் வழங்கினர். அருகில் பால்வளத்துறை கூட்டுறவு சர்பதிவாளர் விஜயா பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக fileim கண்காணிப்பாளர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விஸ்வநாதன், ஆவின் உதவி பொது மேலாளர் முனுசாமி, ஆவின் கால்நடை மருத்துவர் அன்பழகன், விரிவாக்க அலுவலர் இளங்கோவன், கால்நடை மருத்தவ குழு சிறுவாச்சூர், ஆவின் மருத்துவ குழு இணைந்து முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கச் செயலாட்சியர் பிரேம்குமார் செய்து இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com