சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலையும், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமியும் கலந்து கொண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 5 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள், வழக்காடிகள், காப்பீடு நிறுவனத்தினர், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com