எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை மனு முகாம் நடந்தது.எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து சிறப்பு விசாரணை மனு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாண்டியன், டிஎஸ்பிக்கள் தங்கவேல், வளவன், ஜனனிபிரியா, பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் மனுவினை பெற்று விசாரணை நடத்தினர். முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முகாமின்போது மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை பார்த்த எஸ்பி ஷ்யாம்ளாதேவி எழுந்து சென்ற அவரிடம் மனு பெற்று உடனடியாக விசாரணை செய்து தீர்வு காண போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com