பெரம்பலூரில் - இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூரில் - இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சி
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா வரவேற்றார். நேருயுகேந்திரா கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com