பெரம்பலூரில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூரில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.ஆர்வத்துடன் வந்து செலுத்தி கொண்டனர்
பெரம்பலூரில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

பெரம்பலூர்:

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com