பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட நேருயுகேந்திரா மூலம் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளையோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டர் பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்படவுள்ளது.

குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் மாத தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.தகுதியும், விருப்பமும் உள்ள இருபாலரும் www.nyks.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்குரோடு, மாவட்ட இளையோர் அலுவலகம், நேருயுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்பித்தினை பெற்று பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் தகவலுக்கு 04328- 296213, செல்நம்பர் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com