search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
    X

    தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

    • தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலக அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூர்:

    இந்திய அரசு, இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அரசு, இளையோர்களின் வளங்களையும், திறன்களையும் ஒருங்கிணைத்து தேச நிர்மாணப்பணியில் ஈடுபடும் பொருட்டு தன்னார்வ இளையோர் குழுக்களை உருவாக்க எண்ணுகிறது.

    அதன்படி சுகாதாரம், கல்வி, பாலின பாகுபாடு போன்ற சமூக பிரச்சினைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், பிரசாரங்களையும் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவசர காலத்தில் நிர்வாகத்திற்கு உதவவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் தாங்கள் அழைக்கப்படலாம். கல்வி தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.4.2023 அன்று 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (மாணவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்).

    மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் (அதிகப்பட்சம் 2 ஆண்டுகளுக்கு) மட்டும் வழங்கப்படும். இப்பணியினை அரசு நிரந்தர பணியாக சட்டப்படி கோர இயலாது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள முகவரி www.nyks.nic.in-ல் திட்டத்தின் முழு விவரங்களையும், விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட இளையோர் அலுவலர் அலுவலகத்தில் நேரில் பெற்று, வருகிற 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலக அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×