வடமதுரை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் அவதி

பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது. மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்.
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.

இதனால் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பழுதாகி வருகின்றன. மேலும் பைக்கில் செல்பவர்கள் விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைகளிலும் இதே நிலைமை உள்ளது.

ரெயில்வே நிர்வாகத்தினர் சுரங்கப்பாதைகளை முறையாக பராமரிப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாயிகள், கிராமமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com