அடிப்படை வசதிகள் கோரி கன்றுக்குட்டிகள், பாத்திரங்களுடன் பொதுமக்கள் திடீர் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.போராட்டம் நடத்திய வர்களிடம் 10 நாட்களுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
சாணார்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
சாணார்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அதிகளவில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெரு விளக்கு, குடிநீர், கழிவு நீர் ஓடை,தடுப்புச் சுவர் உள்ளிட்டவைகளை 40 ஆண்டு காலமாக செய்து தராமல் உள்ளதை கண்டித்தும், இந்த வசதிகளை செய்து தரக் கோரி மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை யும் எடுக்காததை கண்டி த்தும் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கன்று குட்டி, பாய், சமையல் பாத்திரங்கள், விறகு, குடம் உள்ளிட்ட பொருள்களுடன் தலையில் சுமந்தவாறு சாணார்பட்டி காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி சந்திரன், ரூரல் டி.எஸ்.பி உதயகுமார், இன்ஸ்பெக்ட ர்கள் தங்க முனியசாமி, விக்டோரியா லூர்து மேரி,சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பாது காப்புணியில் ஈடுபட்டனர்.

40 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் நடத்திய வர்களிடம் 10 நாட்களுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற போரா ட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com