சின்னமனூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சின்னமனூர் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிநீர் வினியோகம் விரைவில் சீராகும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com