தகுதியற்ற பயனாளிகளுக்கு பட்டா :புகார் மனு

வட்டாட்சியரிடம் நாவிதர் சமூக மக்கள் புகார் மனு அளித்தனர்.தகுதியற்ற பயனாளிகளுக்கு பட்டா வழங்க முயற்சி நடைபெறுகிறது.
தகுதியற்ற பயனாளிகளுக்கு பட்டா :புகார் மனு
Published on

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதை தடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் நாவிதர் சமூக மக்கள் புகார் மனு அளித்தனர்.

இதில் பென்னாகரம் அருகே செக்குமேட்டில் நாவிதர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது எனவும், இங்கே அவர்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக விடப்பட்டிருந்த இடத்தை தகுதியற்ற பயனாளிகளுக்கு பட்டா வழங்க முயற்சி நடைபெறுகிறது.

அதனை தடுத்து நாவிதர் சமூக மக்களில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பென்னாகரம் வட்டாட்சியரிடம் நாவித சமூக மக்கள் புகார் மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com