என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மத்திய சிறை பரோல் கைதி மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம்
    X

    பாளை மத்திய சிறை பரோல் கைதி மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம்

    • கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட மாடசாமி கடந்த 7-ந் தேதி பரோல் விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார்.
    • சிறைக்கு திரும்பி செல்ல இருந்த நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42).

    இவர் பாளை அருகே உள்ள சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி பரோல் விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார். இதையடுத்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மத்திய சிறைச்சாலைக்கு திரும்பி செல்ல இருந்த நிலையில் நேற்று அங்கு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்.

    படுகாயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×