ஆண்டிபட்டி அருகே போதை மறுவாழ்வு மையம் சார்பில் பனை விதை நடும் விழா

பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குளத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பனைவிதை நடும் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
பனைவிதை நடும் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
Published on

தேனி:

ஆண்டிபட்டி யூனியன், திருமலாபுரம் ஊராட்சி, பந்துவார்பட்டி விலக்கு அருகே செயல்பட்டு வரும் அர்ப்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் மற்றும் சுருளிபட்டி சங்கமம் அறக்கட்டளை சார்பில் பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குளத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் வரதராஜன், சங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், சுருளிபட்டி அன்புராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அர்ப்பணம் மறுவாழ்வு மையம் இயக்குனர் சதிஷ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பி.ஏ.ஐ., மாநில தலைவர், தொழிலதிபர் ஜெகநாதன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அர்ப்பணம் மறுவாழ்வு மையம் இணை இயக்குனர் வனிதா சதிஷ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com