திருச்செந்தூரில் கிருஷ்ணன் கோவிலில் பால்குடம் வழிபாடு

சுவாமிக்கும், கருட பகவானுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் அலங்கார தீபாராதனையாகி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பால்குடம்  ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
பால்குடம் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்

இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டு 6 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதிஉலா வந்து கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து சுவாமிக்கும், கருட பகவானுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திருமஞ்சனத்தில் பஜனை பாடினர். பின்னர் அலங்கார தீபாராதனையாகி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com