செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.
பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சென்ற போது எடுத்தபடம்.
பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சென்ற போது எடுத்தபடம்.
Published on

செங்கோட்டை:

ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால் குட ஊர்வலமானது குலசேகரநாத கோவில் முன்பு அக்ரஹார வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைச் அக்ரஹார இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் செய்திருந்தனர்.

இதனை போன்று மேலூர் உச்சிமகாளி அம்மன் கோவில், முத்துகிழவி அம்மன் கோவில் உள்பட செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆடி கூழ் வழங்கி வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com