பழவந்தாங்கலில் தகராறை தடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்

வாசு மற்று போலீஸ்காரர் விஜயன் ஆகியோர் தாக்குதிலில் ஈடுபட்ட மர்ம கும்பலை தட்டிக்கேட்டனர். தாக்குதலில் போலீஸ்காரர் விஜயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
பழவந்தாங்கலில் தகராறை தடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்
Published on

ஆலந்தூர்:

ஆலந்தூர், கண்ணன் காலனி,5-வது தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது32). இவர் புதுப்பேட்டை ஆயுதப்படை போலீசில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு விஜயன் அவரது வீட்டில் இருந்து உறவினர் வாசு என்பருடன் பழவந்தாங்கல் பஜாரில் காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது வாசுவின் செல்போனில் தொடர்பு கொண்ட அவரது நண்பர் ஒருவர் தன்னை கண்ணன் காலனி மைதானம் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் தகராறில் ஈடுபட்டுதாக்குவதாகவும் உடனே வரும்படியும் கூறினார். இதனால் சம்பவ இடத்திற்கு வாசு மற்று போலீஸ்காரர் விஜயன் ஆகியோர் தாக்குதிலில் ஈடுபட்ட மர்ம கும்பலை தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ்காரர் விஜயனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் விஜயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.உடனடியாக அவைர மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com